Monday, November 13, 2017

ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்



நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள் ஒன்று மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப், யூடுப் போன்றவை ஆகும். இதற்கு தீர்வாக Parallel Space என்னும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் இருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக நம்முடைய மொபைல் போனில் அப்ளிகேஷன்களை நகலி (Clone) செய்து பயன்படுத்த முடியும்.

இந்த மென்பொருளை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் நீங்கள் நகலி எடுக்க விரும்பும் அப்ளிகேஷன்களை தேர்வு செய்து இறுதியாக Add to Parallel Space என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து தோன்றும் விண்டோவில் நீங்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும்.


More Information Please Visit  www.infotrinco.com


No comments:

Post a Comment