Tuesday, January 23, 2018

VLC மீடியா பிளேயர் உதவியுடன் வெப்கேம் ரெக்கார்டிங்


வெப்கேமினை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய மென்பொருள்கள் பல உள்ளன. சில நேரங்களில் நம்மால் அந்த குறிப்பிட்ட மென்பொருள்களை பயன்படுத்த முடியாது. அதுபோன்ற நிலையில் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி வீடியோவினை பதிவு செய்ய முடியும். மேலும் புதியதாக வெப்கேம் வாங்கி பயன்படுத்தும் போதும் அது சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை சரிபார்ப்பதற்கும் இந்த முறையினை பயன்படுத்தி பரிசோதித்து பார்க்க முடியும்.

இதற்கு முதலில் உங்கள் கணினியில் வெப்கேமினை இணைக்கவும், மடிக்கணினியில் வெப்கேம் இருப்பியல்பாகவே இருக்கும். ஒரு சில மடிக்கணினியில் வெப்கேம் இருக்காது. (தமிழகஅரசு வழங்கிய மடிக்கணினிகளில் வெப்கேம் இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும்). பின் விஎல்சி மீடியா பிளேயரை உங்கள் கணினியில் நிறுவவும்.



இணையத்தின் உதவியுடன விஎல்சி மீடியா பிளேயரை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் விஎல்சி பிளேயரை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Media என்னும் பைல் மெனு பொத்தானை அழுத்தி தோன்றும் வரிசையில் Open Capture Device என்பதை தேர்வு செய்யவும். அல்லது Ctrl + c என்னும் சுருக்கு விசையை பயன்படுத்தவும்.



தோன்றும் விண்டோவில் Capture Device என்னும் டேப்பினை தேர்வு செய்து Video device name என்பதற்கு எதிரே உள்ள கோம்போ பாக்சில் வெப்கேமினை தேர்வு செய்யவும். 



பின் Media என்னும் பைல் மெனு பொத்தானை அழுத்தி தோன்றும் வரிசையில் Convert/Save என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் விண்டோவில் File என்னும் டேப்பினை தேர்வு செய்து, பின் Convert / Save என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும். இப்போது விஎல்சி பிளேயரை ஒப்பன் செய்யவும் அப்போது வீடியோவானது பதியப்படும் அதனை வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Thank You. More Details www.infotrinco.com

No comments:

Post a Comment