Thursday, January 4, 2018

கம்ப்யூட்டர் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு என்ன காரணம்?


நாம் கம்ப்யூட்டரை ஒரு முக்கியமான உபயோகத்திற்கு பயன்படுத்தி கொண்டிருக்கும்போது திடீரென அது ஷ்ட-டவுன் ஆனால் நமக்கு பதட்டமும், பயமும் தொற்றிக்கொள்ளும்.
கம்ப்யூட்டர் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு என்ன காரணம்?

என்னதான் கம்ப்யூட்டர் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதன் உள்ளே ஒருசில பொருட்கள் அதிகமாக வெப்பம் அடைந்துவிட்டால் அதன் செயல்பாடு திடீரென நின்றுவிடும். ஒரு கம்ப்யூட்டர் ஏன் திடீரென ஷட்-டவுன் ஆகிறது என்பதற்கான காரணங்களை தற்போது பார்ப்போம்

அதிக வெப்பமாகுதல்

ஒரு கம்ப்யூட்டர் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் அது வெப்பமாகுதல் தான். என்னதான் கம்ப்யூட்டரில் வெப்பத்தை குறைக்க அதில் ஃபேன் இருந்தாலும், நாள் ஆக ஆக ஃபேனில் தூசுகள் படிந்து அந்த ஃபேன் சரியாக வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்
எனவே கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்ட் ஃபேன்கள், கேஸ் ஃபேன்கள் மற்றும் பிராஸசர் ஃபேன்கள் ஆகியவற்றை அவ்வப்போது சோதனை செய்து அதில் உள்ள தூசுகளை சுத்தம் செய்ய வேண்டும்
ஹார்ட்வேர் பிரச்சனை:

ஹார்ட்வேர் பிரச்சனை:

ஒரு கம்ப்யூட்டர் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு அடுத்த காரணம் ஹார்ட்வேரில் ஏற்படும் பிரச்சனை. எனவே ரேம், சிபியூ, மதர்மோர்ட், பவர் சப்ளை மற்றும் வீடியோ கார்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சோதனை செய்ய வேண்டும்.
சமீபத்தில் ஏதாவது ஒரு புதிய ஹார்ட்வேர் பொருத்தப்பட்டிருந்தால் அதை எடுத்துவிட்டு பின்னர் ஷட்-டவுன் ஆகிறதா? என்பதை சோதனை செய்யலாம்.

பேட்டரி:

பேட்டரி:

நீங்கள் லேப்டாப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பேட்டரியின் காரணமாகவும், உங்கள் லேப்டாப் ஷட்-டவுன் ஆகலாம். ஷட்-டவுன் ஆனவுடன் உடனே லேப்டாப்பின் பேட்டரியை கழட்டி அது அந்த லேப்டாப்புக்கு பொருத்தமான பேட்டரிதானா? என்பதை சோதனை செய்யுங்கள். இல்லையென்றால் உடனே பேட்டரியை மாற்ற வேண்டும்
தவறான சார்ஜர்:

தவறான சார்ஜர்:

கேம்ஸ் அதிகமாக பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டபபுகளில் 100 வாட் முதல் 240 வாட் வரையிலான சார்ஜரை ஒருசிலர் பயன்படுத்துவதுண்டு. ஆனால் ஒரு லேப்டாப் 90வாட் சார்ஜரை மட்டுமே சரியாக எடுத்து கொள்ளும். எனவே அதிக சக்தி கொண்ட சார்ஜரை பயன்படுத்தும் போதும் லேப்டாப் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
வைரஸ்:

வைரஸ்:

மற்றொரு ஆனால் அபூர்வமாக வரக்கூடிய ஒரு பிரச்சனை வைரஸ். உங்கள் கம்ப்யூட்டரில் அதிகளவு வைரஸ்கள் இருந்தாலும் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ்கள் சிலசமயம் கம்ப்யூட்டரில் உள்ள ஏதாவது ஒருசில அப்ளிகேசனை ஓப்பன் செய்துவிடுவதால் ஷட்-டவுன் பிரச்ச்னை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கம்ப்யூட்டரில் ஒரு நல்ல ஆண்ட்டி-வைரஸ் போட்டுக்கொள்வது நலம்.

No comments:

Post a Comment