Thursday, January 4, 2018

அனைவரும் அறிந்திருக்க வேண்டிய 15 விண்டோஸ் கமெண்ட்கள்


அனைவரும் அறிந்திருக்க வேண்டிய 15 விண்டோஸ் கமெண்ட்கள்

கோப்புகள் மற்றும் கோப்புறைகளை அணுகும் போது, விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அதிகளவிலான வழிகள் காணப்படுகின்றன. இதில் உள்ள மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாக, விண்டோஸ் ரன் கமெண்ட் பாக்ஸ் காணப்படுகிறது.
இதன் செயல்பாட்டை இதுவரை வேறெதுவும் முறியடிக்க முடியவில்லை என்பதால், இப்போது வரை எல்லா கம்ப்யூட்டர் ஆர்வலர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு அம்சமாக விளங்குகிறது.
இதுபோல நாம் முயற்சிக்க தகுந்த ஏராளமான கமெண்ட்கள் உள்ளன. இதில் சில வேடிக்கையாகவும் சில சிக்கல் மிகுந்ததாகவும், மற்ற சில கால்குலேட்டர், பெயிண்ட் மற்றும் பல்வற்றை திறப்பது போன்ற அனுதின பணிகளை மேற்கொள்ள உதவுகின்றன.
இந்நிலையில் நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் விரும்பியாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 15 முக்கிய கமெண்ட்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
1. %temp% - இந்த கமெண்ட்டை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தற்கால கோப்புகளை நீக்க முடியும். இதன்மூலம் தற்கால கோப்புகளால் வீணாகும் அதிகளவிலான இடம் சேமிக்கப்படுகிறது.
2. cmd - இந்த கமெண்ட்டை பயன்படுத்தி, விண்டோஸ் DOS கமெண்ட்டை திறக்க முடியும்.
3. MSConfig - இந்த கமெண்ட்டை நீங்கள் பயன்படுத்தினால், இது விண்டோஸ் சிஸ்டம் கட்டமைப்பை திறந்து, பூட் தேர்வுகள், ஸ்டார்ட்அப் தேர்வுகள் மற்றும் பலவற்றில் மாற்றங்களை செய்ய உங்களுக்கு உதவும்.
4. பவர்ஷெல் - ரன் டயலாக்கு பாக்ஸில் இந்த கமெண்ட்டை டைப் செய்தால், நிர்வாகியின் உரிமைகள் இல்லாமல் உங்களின் பவர்ஷெல்லை திறக்க முடியும்.
5. lusrmgr.msc - இந்தக் கமெண்ட் மூலம் லோக்கல் பயனர்கள் மற்றும் குழு நிர்வாகியை திறந்து, பயனர்கள் மற்றும் குழுக்களின் பல்வேறு காரியங்களில் திருத்தம் செய்ய முடியும்.
6. perfmon.msc - உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டர் அல்லது நீங்கள் செயல்பாட்டில் வைத்துள்ள ப்ரோகிராம்மின் செயல்பாட்டை கண்காணிக்க விரும்பினால், இந்தக் கமெண்ட்டை தட்டச்சு செய்யலாம். இது டேட்டாவை கொண்ட செயல்பாட்டு மானிட்டரைத் திறக்கும்.
7. appwiz.cpl - இந்த கமெண்ட் மூலம் நிறுவப்பட்ட ப்ரோகிராம்களை, நிறுவப்பட்ட நிலையில் இருந்து நீக்க தேவையான ப்ரோகிராம்கள் மற்றும் அம்சங்களைக் கொண்ட விண்டோவைத் திறக்கலாம்.
8. devmgmt.msc - விண்டோஸ் சாதன நிர்வாகத்திற்காக இந்த கமெண்ட் பயன்படுத்தப்படுகிறது. இங்கு உங்கள் அனைத்து ஹார்டுவேர் சாதனங்களையும் நிர்வாகிக்க முடியும்.
9. regedit - இந்தக் கமெண்ட், விண்டோஸ் ரெஜிஸ்டரை திறக்க பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு படிநிலை தரவுதளமாக செயல்பட்டு, ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து கட்டமைப்புகள் மற்றும் அமைப்புகளை தொகுத்து அளித்து, ப்ரோகிராம்களை நிறுவுகின்றது.
10. .. (இரு புள்ளிகள்) - இந்தக் கமெண்ட் மூலம் சி டிரைவ்வில் உள்ள பயனர் கோப்புறையை நேரடியாக திறக்க முடியும்.
11. . (ஒற்றை புள்ளி) - இந்தக் கமெண்ட் மூலம் பதிவிறக்கங்கள், ஆவணங்கள், டெஸ்டாப் மற்றும் படங்கள் உள்ளிட்டவை உள்ள மற்ற அனைத்து லோக்கல் கோப்புறைகளையும் தொகுத்து அளிக்கும் தற்போதைய பயனரின் முகப்பு கோப்புறையை திறக்க முடியும்.
12. கன்ரோல் - இந்தக் கமெண்ட் மூலம் உங்கள் சிஸ்டத்தை மாற்றியமைக்க கூடிய கன்ரோல் பேனலை திறக்க முடியும்.
13. நோட்பேட் - உங்களுக்கு ஏதாவது எழுதி வைத்து கொள்ள வேண்டுமானால், இந்த கமெண்ட்டை பயன்படுத்தி நோட்பேடை திறக்கலாம்.
14. taskmgr - விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் எல்லா செயல்பாடுகளையும் ப்ரோகிராம்களையும் நிர்வகிக்க கூடிய டாஸ்க்மேனேஜரை, இதன் மூலம் திறக்க முடியும்.
15. sysdm.cpl - இந்த கமெண்ட் மூலம் சிஸ்டத்தின் உடைமைகள் விண்டோவை திறக்கலாம்.

No comments:

Post a Comment