Tuesday, January 23, 2018

VLC மீடியா பிளேயர் உதவியுடன் வெப்கேம் ரெக்கார்டிங்


வெப்கேமினை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய மென்பொருள்கள் பல உள்ளன. சில நேரங்களில் நம்மால் அந்த குறிப்பிட்ட மென்பொருள்களை பயன்படுத்த முடியாது. அதுபோன்ற நிலையில் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி வீடியோவினை பதிவு செய்ய முடியும். மேலும் புதியதாக வெப்கேம் வாங்கி பயன்படுத்தும் போதும் அது சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை சரிபார்ப்பதற்கும் இந்த முறையினை பயன்படுத்தி பரிசோதித்து பார்க்க முடியும்.

இதற்கு முதலில் உங்கள் கணினியில் வெப்கேமினை இணைக்கவும், மடிக்கணினியில் வெப்கேம் இருப்பியல்பாகவே இருக்கும். ஒரு சில மடிக்கணினியில் வெப்கேம் இருக்காது. (தமிழகஅரசு வழங்கிய மடிக்கணினிகளில் வெப்கேம் இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும்). பின் விஎல்சி மீடியா பிளேயரை உங்கள் கணினியில் நிறுவவும்.



இணையத்தின் உதவியுடன விஎல்சி மீடியா பிளேயரை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் விஎல்சி பிளேயரை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Media என்னும் பைல் மெனு பொத்தானை அழுத்தி தோன்றும் வரிசையில் Open Capture Device என்பதை தேர்வு செய்யவும். அல்லது Ctrl + c என்னும் சுருக்கு விசையை பயன்படுத்தவும்.



தோன்றும் விண்டோவில் Capture Device என்னும் டேப்பினை தேர்வு செய்து Video device name என்பதற்கு எதிரே உள்ள கோம்போ பாக்சில் வெப்கேமினை தேர்வு செய்யவும். 



பின் Media என்னும் பைல் மெனு பொத்தானை அழுத்தி தோன்றும் வரிசையில் Convert/Save என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் விண்டோவில் File என்னும் டேப்பினை தேர்வு செய்து, பின் Convert / Save என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும். இப்போது விஎல்சி பிளேயரை ஒப்பன் செய்யவும் அப்போது வீடியோவானது பதியப்படும் அதனை வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Thank You. More Details www.infotrinco.com

Monday, January 15, 2018

காணாமல் போன CD Driveஐ கணினியில் திரும்ப கொண்டுவருவது எப்படி?


கணினியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது CD/DVD டிரைவ் ஆகும்.  சில நேரங்களில் CD டிரைவில் CDயை போட்டு பார்த்தால் கணினியின் my computerல் CD டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது CD டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது?
1.  முதலில் Device Managerல் CD டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Devise Manager செல்ல desktopல்  உள்ள my computer ஐகானை வலது கிளிக் செய்து manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Devise Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணினியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் CD/DVD Rom devices என்பது enable ஆக உள்ளதா என பார்க்க வேண்டும்.
2.  உங்கள் கணினியின் CPUவில் CD/DVD டிரைவை இணைக்கும் cable சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.
3.  மேற்கண்டவை சரியாக இருந்தும் கணினியில் CD டிரைவ் தெரியவில்லை என்றால் Registerல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன CD டிரைவை மீட்கலாம்.
Start->Run சென்று regedit என்று type செய்து எண்டர் செய்யவும். இப்போது கணினியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள keyஐ கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் CD/DVD டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetControlClass{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}
இந்த keyஐ கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkeyகள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணினியை  Restart செய்து விட்டு பார்க்கவும்.
Thank You.

Tuesday, January 9, 2018

உங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை

கணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும், பெரியவர்களுக்கு அலுவலக வேலைகளை சுலபமாக்குவதற்கு என்று எல்லோருக்கும் தற்பொழுது கணினி ஒரு முக்கிய பொருளாகி விட்டது. கணினி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணினியின் சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும்.
ஆகவே நம் கணினி பழுதானால் service engineer என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிடுகிறோம்.  ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணினியை பற்றி சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.   இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருளினால் கணினியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம்.
  • இந்த மென்பொருளில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML பைல்களாக உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.
  • பிரிண்ட் எடுத்தல், ஈமெயில் அனுப்புதல் போன்ற முக்கியமான வசதிகளும் இதில் உள்ளது.
  • இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக இயக்கலாம்.
  • இதில் நம்முடைய கீபோர்டில் Numlock, Capslock, Scroll Lock போன்ற கீகள் செயலில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியும்.
  • இந்த மென்பொருள் 1.04MB அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.
உபயோகிக்கும் முறை:
  • இந்த மென்பொருளை கீழே உள்ள linkல் சென்று   SimpleSysInfo 2.9   உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • டவுன்லோட் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் வரும்.
இந்த விண்டோவில் சுமார் 10க்கும் மேற்பட்ட Tabகள் இருக்கும் அதில் ஒவ்வொன்றாக click செய்து உங்களுடைய கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
link  –  http://wieldraaijer.nl/

வைரஸ் தாக்கிய Pen Drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க



தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்  ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.
  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
Please Like Our Face Book Page
More Details www.infotrinco.com

Monday, January 8, 2018

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை

 உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.
உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்.


உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள்  கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 15 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .

இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து  வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .

இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக  பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும் 
முதலாவது முறை :.
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:

இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .

Download Here Software



Thursday, January 4, 2018

கம்ப்யூட்டர் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு என்ன காரணம்?


நாம் கம்ப்யூட்டரை ஒரு முக்கியமான உபயோகத்திற்கு பயன்படுத்தி கொண்டிருக்கும்போது திடீரென அது ஷ்ட-டவுன் ஆனால் நமக்கு பதட்டமும், பயமும் தொற்றிக்கொள்ளும்.
கம்ப்யூட்டர் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு என்ன காரணம்?

என்னதான் கம்ப்யூட்டர் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதன் உள்ளே ஒருசில பொருட்கள் அதிகமாக வெப்பம் அடைந்துவிட்டால் அதன் செயல்பாடு திடீரென நின்றுவிடும். ஒரு கம்ப்யூட்டர் ஏன் திடீரென ஷட்-டவுன் ஆகிறது என்பதற்கான காரணங்களை தற்போது பார்ப்போம்

அதிக வெப்பமாகுதல்

ஒரு கம்ப்யூட்டர் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் அது வெப்பமாகுதல் தான். என்னதான் கம்ப்யூட்டரில் வெப்பத்தை குறைக்க அதில் ஃபேன் இருந்தாலும், நாள் ஆக ஆக ஃபேனில் தூசுகள் படிந்து அந்த ஃபேன் சரியாக வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்
எனவே கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்ட் ஃபேன்கள், கேஸ் ஃபேன்கள் மற்றும் பிராஸசர் ஃபேன்கள் ஆகியவற்றை அவ்வப்போது சோதனை செய்து அதில் உள்ள தூசுகளை சுத்தம் செய்ய வேண்டும்
ஹார்ட்வேர் பிரச்சனை:

ஹார்ட்வேர் பிரச்சனை:

ஒரு கம்ப்யூட்டர் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு அடுத்த காரணம் ஹார்ட்வேரில் ஏற்படும் பிரச்சனை. எனவே ரேம், சிபியூ, மதர்மோர்ட், பவர் சப்ளை மற்றும் வீடியோ கார்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சோதனை செய்ய வேண்டும்.
சமீபத்தில் ஏதாவது ஒரு புதிய ஹார்ட்வேர் பொருத்தப்பட்டிருந்தால் அதை எடுத்துவிட்டு பின்னர் ஷட்-டவுன் ஆகிறதா? என்பதை சோதனை செய்யலாம்.

பேட்டரி:

பேட்டரி:

நீங்கள் லேப்டாப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பேட்டரியின் காரணமாகவும், உங்கள் லேப்டாப் ஷட்-டவுன் ஆகலாம். ஷட்-டவுன் ஆனவுடன் உடனே லேப்டாப்பின் பேட்டரியை கழட்டி அது அந்த லேப்டாப்புக்கு பொருத்தமான பேட்டரிதானா? என்பதை சோதனை செய்யுங்கள். இல்லையென்றால் உடனே பேட்டரியை மாற்ற வேண்டும்
தவறான சார்ஜர்:

தவறான சார்ஜர்:

கேம்ஸ் அதிகமாக பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டபபுகளில் 100 வாட் முதல் 240 வாட் வரையிலான சார்ஜரை ஒருசிலர் பயன்படுத்துவதுண்டு. ஆனால் ஒரு லேப்டாப் 90வாட் சார்ஜரை மட்டுமே சரியாக எடுத்து கொள்ளும். எனவே அதிக சக்தி கொண்ட சார்ஜரை பயன்படுத்தும் போதும் லேப்டாப் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
வைரஸ்:

வைரஸ்:

மற்றொரு ஆனால் அபூர்வமாக வரக்கூடிய ஒரு பிரச்சனை வைரஸ். உங்கள் கம்ப்யூட்டரில் அதிகளவு வைரஸ்கள் இருந்தாலும் திடீரென ஷட்-டவுன் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ்கள் சிலசமயம் கம்ப்யூட்டரில் உள்ள ஏதாவது ஒருசில அப்ளிகேசனை ஓப்பன் செய்துவிடுவதால் ஷட்-டவுன் பிரச்ச்னை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கம்ப்யூட்டரில் ஒரு நல்ல ஆண்ட்டி-வைரஸ் போட்டுக்கொள்வது நலம்.

10 விண்டோஸ் தந்திரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
கம்ப்யூட்டரில் கீபோர்டில் உள்ள கீ'கள் மவுஸ் மற்றும் டச்பேட் பயன்படுவதைவிட அதிகளவில் பயன்படும். வேகமாகவும், மிகச்சரியாகவும், இந்த கீகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. Windows 10 Fall Creators Update - GIZBOT பெரும்பாலானோர்களுக்கு கீ போர்ட்டில் காப்பி மற்றும் பேஸ்ட் மட்டுமே தெரிந்திருப்பார்கள். ஆனால் அதை தாண்டி இன்னும் பல ஆச்சரியமான தகவல்கள் உள்ளது என்பதை தற்போது தெரிந்து கொள்வோம் முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! விண்டோஸ் கீ எதற்கு பயன்படுகிறது தெரியுமா? விண்டோஸ் கீ + அம்புக் குறி கீ - இடது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும். விண்டோஸ் கீ + வலது அம்புக் குறி கீ: வலது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும். விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி கீ: அப்போதைய விண்டோவினைப் பெரிதாக்கும். விண்டோஸ் கீ + கீழ் அம்புக் குறி கீ: பெரிதாக்கிய விண்டோவினைப் பழைய நிலைக்குக் கொண்டு வரும். விண்டோஸ் மேனேஜ்மெண்ட்: விண்டோஸ் கீ + டேப் கீ - டாஸ்க் வியூ தோன்றும் அல்ட்+டேப் - இரண்டு ஆப்ஸ்களுக்கு இடையே தோன்றும் ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் வழங்கும் சிறப்பு ரீசாரஜ் ஆபர்.! விர்ட்டியுவல் டெக்ஸ்டாப்ஸ்கள் விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + D _ டெக்ஸ்டாப்பில் புதிய விர்ட்டியுவல் தோன்றும் விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + F4 - தற்போதுள்ள டெக்ஸ்டாப் விண்டோ மூடப்படும் விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + இடது அல்லது வலது அம்புக்குறி - விர்ட்டியுவல் டெக்ஸ்டாப்புகளுக்கு இடையில் தோன்றும் முக்கிய ஷார்ட்-கட் கீ: கண்ட்ரோல் + V - பேஸ்ட் செய்ய உதவும் கண்ட்ரோல் + C - காப்பி செய்ய உதவும் கண்ட்ரோல் + X - குறிப்பிட்ட ஒன்றை கட் செய்ய உதவும் கண்ட்ரோல் + A - அனைத்தையும் செல்க்ட் செய்ய உதவும் கண்ட்ரோல் + Z - ஏற்கனவே செய்ததை நீக்கும் கண்ட்ரோல் + Y - ஏற்கனவே செய்தை திரும்ப செய்யும் கண்ட்ரோல் + D - செலக்ட் செய்ததை டெலிட் செய்ய உதவும் மேலும் சில ஷார்ட்-கட் கீ Windows key + A: Action Center திறக்கப்படும். Windows key + C: கார்டனா நாம் சொல்வதைக் கேட்டு செயல்படும் தன்மை கொண்ட கம்ப்யூட்டரில் இந்த கீகள் இணைப்பு செயல்படும். Windows key +D: டெக்ஸ்டாப்பில் டிஸ்ப்ளே செய்ய அல்லது மறைக்க Windows key + G: Game bar திறக்கப்படும். Windows key + H: Share sidebar திறக்கப்படும். Windows key + I: Settings menu திறக்கப்படும். Windows key + K: Connect sidebar இயக்கப்படும். Windows key + L: உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும். Windows key + M: அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்ய Windows key + R: டாஸ் கட்டளைகளுக்கான Run window இயக்கப்படும். Windows key + S: சியர்ச் ஒப்பன் செய்யும் Windows key + U: Ease of Access மையம் செயல்பாட்டிற்கு வரும். Windows key + x: குவிக் லிங்க் ஓப்பன் ஆகும் Windows key + நம்பர்: டாஸ்க்பாரில் உள்ள நம்பரை ஓப்பன் செய்யும் Windows key + Enter - நேரட்டரை ஒப்பன் செய்யும் Windows key + Home - இயங்கி கொண்டிருக்கும் விண்டோவை தவிர அனைத்தையும் மினிமைஸ் செய்யும் Windows key + PrtScn - ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை சேமிக்கவும் செய்யும் Windows key + Shift + மேல் அம்புக்குறி - டெஸ்க்டாப் விண்டோவை மேல் அல்லது கீழ் கொண்டு செல்லும்

விர்ட்டியுவல் டெக்ஸ்டாப்ஸ்கள் விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + D _ டெக்ஸ்டாப்பில் புதிய விர்ட்டியுவல் தோன்றும் விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + F4 - தற்போதுள்ள டெக்ஸ்டாப் விண்டோ மூடப்படும் விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + இடது அல்லது வலது அம்புக்குறி - விர்ட்டியுவல் டெக்ஸ்டாப்புகளுக்கு இடையில் தோன்றும்

முக்கிய ஷார்ட்-கட் கீ: கண்ட்ரோல் + V - பேஸ்ட் செய்ய உதவும் கண்ட்ரோல் + C - காப்பி செய்ய உதவும் கண்ட்ரோல் + X - குறிப்பிட்ட ஒன்றை கட் செய்ய உதவும் கண்ட்ரோல் + A - அனைத்தையும் செல்க்ட் செய்ய உதவும் கண்ட்ரோல் + Z - ஏற்கனவே செய்ததை நீக்கும் கண்ட்ரோல் + Y - ஏற்கனவே செய்தை திரும்ப செய்யும் கண்ட்ரோல் + D - செலக்ட் செய்ததை டெலிட் செய்ய உதவும்

மேலும் சில ஷார்ட்-கட் கீ Windows key + A: Action Center திறக்கப்படும். Windows key + C: கார்டனா நாம் சொல்வதைக் கேட்டு செயல்படும் தன்மை கொண்ட கம்ப்யூட்டரில் இந்த கீகள் இணைப்பு செயல்படும். Windows key +D: டெக்ஸ்டாப்பில் டிஸ்ப்ளே செய்ய அல்லது மறைக்க Windows key + G: Game bar திறக்கப்படும். Windows key + H: Share sidebar திறக்கப்படும். Windows key + I: Settings menu திறக்கப்படும். Windows key + K: Connect sidebar இயக்கப்படும். Windows key + L: உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும். Windows key + M: அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்ய Windows key + R: டாஸ் கட்டளைகளுக்கான Run window இயக்கப்படும். Windows key + S: சியர்ச் ஒப்பன் செய்யும் Windows key + U: Ease of Access மையம் செயல்பாட்டிற்கு வரும். Windows key + x: குவிக் லிங்க் ஓப்பன் ஆகும் Windows key + நம்பர்: டாஸ்க்பாரில் உள்ள நம்பரை ஓப்பன் செய்யும் Windows key + Enter - நேரட்டரை ஒப்பன் செய்யும் Windows key + Home - இயங்கி கொண்டிருக்கும் விண்டோவை தவிர அனைத்தையும் மினிமைஸ் செய்யும் Windows key + PrtScn - ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை சேமிக்கவும் செய்யும் Windows key + Shift + மேல் அம்புக்குறி - டெஸ்க்டாப் விண்டோவை மேல் அல்லது கீழ் கொண்டு செல்லும்

அனைவரும் அறிந்திருக்க வேண்டிய 15 விண்டோஸ் கமெண்ட்கள்


அனைவரும் அறிந்திருக்க வேண்டிய 15 விண்டோஸ் கமெண்ட்கள்

கோப்புகள் மற்றும் கோப்புறைகளை அணுகும் போது, விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அதிகளவிலான வழிகள் காணப்படுகின்றன. இதில் உள்ள மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாக, விண்டோஸ் ரன் கமெண்ட் பாக்ஸ் காணப்படுகிறது.
இதன் செயல்பாட்டை இதுவரை வேறெதுவும் முறியடிக்க முடியவில்லை என்பதால், இப்போது வரை எல்லா கம்ப்யூட்டர் ஆர்வலர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு அம்சமாக விளங்குகிறது.
இதுபோல நாம் முயற்சிக்க தகுந்த ஏராளமான கமெண்ட்கள் உள்ளன. இதில் சில வேடிக்கையாகவும் சில சிக்கல் மிகுந்ததாகவும், மற்ற சில கால்குலேட்டர், பெயிண்ட் மற்றும் பல்வற்றை திறப்பது போன்ற அனுதின பணிகளை மேற்கொள்ள உதவுகின்றன.
இந்நிலையில் நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் விரும்பியாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 15 முக்கிய கமெண்ட்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
1. %temp% - இந்த கமெண்ட்டை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தற்கால கோப்புகளை நீக்க முடியும். இதன்மூலம் தற்கால கோப்புகளால் வீணாகும் அதிகளவிலான இடம் சேமிக்கப்படுகிறது.
2. cmd - இந்த கமெண்ட்டை பயன்படுத்தி, விண்டோஸ் DOS கமெண்ட்டை திறக்க முடியும்.
3. MSConfig - இந்த கமெண்ட்டை நீங்கள் பயன்படுத்தினால், இது விண்டோஸ் சிஸ்டம் கட்டமைப்பை திறந்து, பூட் தேர்வுகள், ஸ்டார்ட்அப் தேர்வுகள் மற்றும் பலவற்றில் மாற்றங்களை செய்ய உங்களுக்கு உதவும்.
4. பவர்ஷெல் - ரன் டயலாக்கு பாக்ஸில் இந்த கமெண்ட்டை டைப் செய்தால், நிர்வாகியின் உரிமைகள் இல்லாமல் உங்களின் பவர்ஷெல்லை திறக்க முடியும்.
5. lusrmgr.msc - இந்தக் கமெண்ட் மூலம் லோக்கல் பயனர்கள் மற்றும் குழு நிர்வாகியை திறந்து, பயனர்கள் மற்றும் குழுக்களின் பல்வேறு காரியங்களில் திருத்தம் செய்ய முடியும்.
6. perfmon.msc - உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டர் அல்லது நீங்கள் செயல்பாட்டில் வைத்துள்ள ப்ரோகிராம்மின் செயல்பாட்டை கண்காணிக்க விரும்பினால், இந்தக் கமெண்ட்டை தட்டச்சு செய்யலாம். இது டேட்டாவை கொண்ட செயல்பாட்டு மானிட்டரைத் திறக்கும்.
7. appwiz.cpl - இந்த கமெண்ட் மூலம் நிறுவப்பட்ட ப்ரோகிராம்களை, நிறுவப்பட்ட நிலையில் இருந்து நீக்க தேவையான ப்ரோகிராம்கள் மற்றும் அம்சங்களைக் கொண்ட விண்டோவைத் திறக்கலாம்.
8. devmgmt.msc - விண்டோஸ் சாதன நிர்வாகத்திற்காக இந்த கமெண்ட் பயன்படுத்தப்படுகிறது. இங்கு உங்கள் அனைத்து ஹார்டுவேர் சாதனங்களையும் நிர்வாகிக்க முடியும்.
9. regedit - இந்தக் கமெண்ட், விண்டோஸ் ரெஜிஸ்டரை திறக்க பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு படிநிலை தரவுதளமாக செயல்பட்டு, ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து கட்டமைப்புகள் மற்றும் அமைப்புகளை தொகுத்து அளித்து, ப்ரோகிராம்களை நிறுவுகின்றது.
10. .. (இரு புள்ளிகள்) - இந்தக் கமெண்ட் மூலம் சி டிரைவ்வில் உள்ள பயனர் கோப்புறையை நேரடியாக திறக்க முடியும்.
11. . (ஒற்றை புள்ளி) - இந்தக் கமெண்ட் மூலம் பதிவிறக்கங்கள், ஆவணங்கள், டெஸ்டாப் மற்றும் படங்கள் உள்ளிட்டவை உள்ள மற்ற அனைத்து லோக்கல் கோப்புறைகளையும் தொகுத்து அளிக்கும் தற்போதைய பயனரின் முகப்பு கோப்புறையை திறக்க முடியும்.
12. கன்ரோல் - இந்தக் கமெண்ட் மூலம் உங்கள் சிஸ்டத்தை மாற்றியமைக்க கூடிய கன்ரோல் பேனலை திறக்க முடியும்.
13. நோட்பேட் - உங்களுக்கு ஏதாவது எழுதி வைத்து கொள்ள வேண்டுமானால், இந்த கமெண்ட்டை பயன்படுத்தி நோட்பேடை திறக்கலாம்.
14. taskmgr - விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் எல்லா செயல்பாடுகளையும் ப்ரோகிராம்களையும் நிர்வகிக்க கூடிய டாஸ்க்மேனேஜரை, இதன் மூலம் திறக்க முடியும்.
15. sysdm.cpl - இந்த கமெண்ட் மூலம் சிஸ்டத்தின் உடைமைகள் விண்டோவை திறக்கலாம்.

Ethical Hacking - Password Hacking


We have passwords for emails, databases, computer systems, servers, bank accounts, and virtually everything that we want to protect. Passwords are in general the keys to get access into a system or an account.
In general, people tend to set passwords that are easy to remember, such as their date of birth, names of family members, mobile numbers, etc. This is what makes the passwords weak and prone to easy hacking.
One should always take care to have a strong password to defend their accounts from potential hackers. A strong password has the following attributes −
  • Contains at least 8 characters.
  • A mix of letters, numbers, and special characters.
  • A combination of small and capital letters.

Dictionary Attack

In a dictionary attack, the hacker uses a predefined list of words from a dictionary to try and guess the password. If the set password is weak, then a dictionary attack can decode it quite fast.
Hydra is a popular tool that is widely used for dictionary attacks. Take a look at the following screenshot and observe how we have used Hydra to find out the password of an FTP service.
Dictionary Attack

Hybrid Dictionary Attack

Hybrid dictionary attack uses a set of dictionary words combined with extensions. For example, we have the word “admin” and combine it with number extensions such as “admin123”, “admin147”, etc.
Crunch is a wordlist generator where you can specify a standard character set or a character set. Crunch can generate all possible combinations and permutations. This tool comes bundled with the Kali distribution of Linux.
Hybrid Attack

Brute-Force Attack

In a brute-force attack, the hacker uses all possible combinations of letters, numbers, special characters, and small and capital letters to break the password. This type of attack has a high probability of success, but it requires an enormous amount of time to process all the combinations. A brute-force attack is slow and the hacker might require a system with high processing power to perform all those permutations and combinations faster.
John the Ripper or Johnny is one of the powerful tools to set a brute-force attack and it comes bundled with the Kali distribution of Linux.
Brute Force

Rainbow Tables

A rainbow table contains a set of predefined passwords that are hashed. It is a lookup table used especially in recovering plain passwords from a cipher text. During the process of password recovery, it just looks at the pre-calculated hash table to crack the password. The tables can be downloaded from http://project-rainbowcrack.com/table.htm
RainbowCrack 1.6.1 is the tool to use the rainbow tables. It is available again in Kali distribution.
Rainbow Table

Quick Tips

  • Don’t note down the passwords anywhere, just memorize them.
  • Set strong passwords that are difficult to crack.
  • Use a combination of alphabets, digits, symbols, and capital and small letters.
  • Don’t set passwords that are similar to their usernames.
Thank You.
More Details www.infotrinco.com