Wednesday, December 13, 2017

மைக்ரோசாப்ட்டின் Security Essentials


Microsoft Security Essentials என்பது ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் ஆகும். இந்த ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதாகும். இது இரண்டாவது பதிப்பாகும். இதன் முந்தைய பதிப்பானது 2009 ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டி வைரஸ் மென்பொருளானது மிகவும் பிரபலமானது ஆகும். மேலும் இந்த ஆண்டிவைரஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் இது மிகவும் சிறப்பான ஒன்றாக உள்ளது , இந்த ஆண்டி வைரஸ் ஆனது அதிகப்படியான பாதுகாப்பு தன்மையினை அளிக்கிறது.


இந்த ண்டிவைரஸ் மென்பொருளானது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் மற்ற ஆண்டிவைரஸ்களை விட விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு Microsoft Security Essentials உகந்ததாக இருக்கும். மேலும் இந்த ஆண்டிவைரஸ் இண்டர்நெட் வழியாக எந்தவித வைரஸ்களும் நம்முடைய கணினிக்கு ஊடுருவாமல் இருக்க வழிவகை செய்கிறது, இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு தனி பாதுகாப்பினையும் இந்த ஆண்டிவைரஸ் வழங்குகிறது.

இந்த பதிப்பில் கூடுதல் அம்சமாக anti-malware engine புகுத்தப்பட்டுள்ளது, இந்த வசதியின் மூலமாக நம்முடைய கணினியில் புதிதாக எந்த ஒரு டிவைஸ்யை உள்ளீடு செய்தாலும் அதில் உள்ள வைரஸ்களை கிளீன் செய்துவிடும். இந்த ஆண்டிவைரஸ் நம்முடைய கணினிக்கு முழுமையான பாதுகாப்பு வசதியினை வழங்குகிறது.

Thank You

No comments:

Post a Comment