Friday, December 1, 2017

பிடிஎப் கோப்புகளை எடிட் செய்ய


பிடிஎப் கோப்புகளை உருவாக்குவதற்கு முக்கியமான காரணம் அதனை எந்தவிதமான எடிட்டிங்கும் செய்ய கூடாது என்பதற்காகவும், மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மட்டுமே ஆகும். நாம் ஆப்பிஸ் தொகுப்பினை கொண்டு டாக்குமெண்ட்களை உருவாக்கும் போது அதற்கு கடவுச்சொல் கொண்டு உருவாக்கியிருப்போம். ஆனால் பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் போது அதற்கு கடவுச்சொல் கொண்டு உருவாக்குவது அவ்வளவு எளிதான செயல் இல்லை. ஏதாவது ஒரு மென்பொருள் துணைகொண்டு மட்டுமே பிடிஎப் கோப்பிற்கு கடவுச்சொல்லை உருவாக்க முடியும். மேலும் பிடிஎப் கோப்பின் பக்கங்களை தனித்தனியாக பிரிக்கவும், பிடிஎப் டாக்குமெண்டிற்கு பேக்ரவுண்ட் வாட்டர்மார்க் செட் செய்யவும் நாம் மூன்றாம் தர மென்பொருளின் உதவியை நாட வேண்டும். 




மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் விருப்பபடி தேர்வினை தெரிவு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட பிடிஎப் கோப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின் Save As பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பினை சேமித்துக்கொள்ளவும்.


இந்த மென்பொருள் உதவியுடன், பிடிஎப் கோப்புகளை பிரிக்கவும், வாட்டர்மார்கினை இடவும், தனித்தனியாக பிடிஎப் பக்கங்களை பிரிக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.

Thank You


No comments:

Post a Comment