Thursday, December 21, 2017


நீங்களும் Hack செய்யப்பட்டிருக்கலாம் Cover Image


தினம்தோறும் பல்வேறு  Website-ன் Database-கள் Hack செய்யப்பட்டு(Data breaches) அவற்றில் உள்ள Account போன்றவற்றை Hackers Darkweb-ல் விற்பனை செய்து விடுகின்றனர் அல்லது இலவசமாக Internet-ல் உலாவ விட்டுவிடுகின்றனர்.அவ்வாறு Hack செய்யப்பட்ட  Account-களில் உங்கள்  Account-ம் இருக்கிறதா என check செய்ய இந்த தளம்
https://haveibeenpwned.com/  நமக்கு உதவி செய்கிறது. 
இந்த தளத்தில்  நமது User Name or Account id (xxxxx@gmail.com). நமது Password , Domain போன்றவற்றை check செய்து கொள்ளலாம் இந்த  தளம்   நடந்த   பல்வேறு  Data breaches -உடன் நமது Account-ஐ Check செய்து  நாம் Hack செய்யப்பட்டோமா? இல்லைய என்று தெரிவிக்கும்.
இப்போது நாம்  Username  Hack -ஆகி உள்ளாதா என்று பார்க்கலாம்.
no Pwned -இதன் அர்த்தம்  . Hack செய்யப்பட்டிருந்தால் Pwned  என வந்தால்  Hack ஆகி இருக்கிறது என  அர்த்தம் அடுத்தது Password Hack ஆகி உள்ளதா என பார்க்கலாம்.
இப்பொது  நாம் பார்க்கும் இந்த படம் Password  Hacked ஆகி உள்ளதை காட்டுகிறது.. அடுத்தது.
இந்த படத்தில் நாம் கொடுத்த Password எந்த  Data breaches-ளும் மாட்டவில்லை. இதுபோல உங்கள் Accounts&Password -ஐ  check  செய்து  கொள்ளலாம்.ஒரு வேளை  நீங்கள் Hack செய்யப்பட்டிருந்தால் உங்கள் Password-ஐ மாற்றி Strong-ஆக வைகவும். 
Thank You.

Wednesday, December 13, 2017

மைக்ரோசாப்ட்டின் Security Essentials


Microsoft Security Essentials என்பது ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் ஆகும். இந்த ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதாகும். இது இரண்டாவது பதிப்பாகும். இதன் முந்தைய பதிப்பானது 2009 ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டி வைரஸ் மென்பொருளானது மிகவும் பிரபலமானது ஆகும். மேலும் இந்த ஆண்டிவைரஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் இது மிகவும் சிறப்பான ஒன்றாக உள்ளது , இந்த ஆண்டி வைரஸ் ஆனது அதிகப்படியான பாதுகாப்பு தன்மையினை அளிக்கிறது.


இந்த ண்டிவைரஸ் மென்பொருளானது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் மற்ற ஆண்டிவைரஸ்களை விட விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு Microsoft Security Essentials உகந்ததாக இருக்கும். மேலும் இந்த ஆண்டிவைரஸ் இண்டர்நெட் வழியாக எந்தவித வைரஸ்களும் நம்முடைய கணினிக்கு ஊடுருவாமல் இருக்க வழிவகை செய்கிறது, இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு தனி பாதுகாப்பினையும் இந்த ஆண்டிவைரஸ் வழங்குகிறது.

இந்த பதிப்பில் கூடுதல் அம்சமாக anti-malware engine புகுத்தப்பட்டுள்ளது, இந்த வசதியின் மூலமாக நம்முடைய கணினியில் புதிதாக எந்த ஒரு டிவைஸ்யை உள்ளீடு செய்தாலும் அதில் உள்ள வைரஸ்களை கிளீன் செய்துவிடும். இந்த ஆண்டிவைரஸ் நம்முடைய கணினிக்கு முழுமையான பாதுகாப்பு வசதியினை வழங்குகிறது.

Thank You

Tuesday, December 12, 2017

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அப்டேட்டினை டிசேபிள் செய்வது எப்படி?

இதற்கு முந்தைய விண்டோஸ் இயங்குதளங்களில் விண்டோஸ் அப்டேட்டினை மிகவும் எளிமையாக டிசேபிள் செய்து கொள்ள முடியும். ஆனால் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் விண்டோஸ் அப்டேட்டினை டிசேபிள் செய்வது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதற்கு நாம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இரண்டு இடத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும். 


1) முதலில் கம்ப்யூட்டர் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Manage என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Services and Applications என்பதை  கிளிக் செய்யவும். அடுத்து Services என்பதை கிளிக் செய்யவும். 



கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Windows Update என்பதை டபுள் கிளிக் செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Disabled என்பதை தேர்வு செய்து OK பட்டனை அழுத்தவும்.



2) அடுத்து Windows + R பட்டனை ஒரு சேர அழுத்தி தோன்றும் ரன் விண்டோவில் gpedit.msc என்று உள்ளிட்டு OK பட்டனை அழுத்தவும். 


அடுத்து தோன்றும் விண்டோவில் Computer Configuration > Administrative Templates > Windows Components > Windows Updateஎன்று வரிசையாக தேர்வு செய்து Configure Automatic Updates என்பதை டபுள் கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Disabled என்பதை தேர்வு செய்து OK பட்டனை அழுத்தவும்.


இந்த இரண்டு மாற்றங்களையும் உங்கள் கணினியில் செய்த பிறகு உங்களது கணினியை மறுதொடக்கம் (Restart) செய்து கொள்ளவும்.

Thank You..

Find Your Dream Job in North & East. Sri Lanka

More Details 

Saturday, December 9, 2017

Speed Up Your PC 
உங்களின் கணினியில் இடம் போத வில்லை என புதிதாக ஒரு HardDisk வாங்கினால் நல்லது என நினைக்கிறீர்களா?  புதிதாக ஒரு 500 GB அல்லது 1 TB  வாங்கி வைக்கலாம் என ஒரு யோசனை வைத்திருந்தால் அதை சற்று தள்ளிப் போடுங்கள்.
அல்லது., கணினியின் செயலி (Processor) மெதுவாக உள்ளது என புதிய  Core i7 / Core i5 Processor  வாங்கி மேம்படுத்துதலை விட ஒரு 120 GB SSD  வாங்கி அதில் உங்களின் Windows + Softwaresஐ பதியும் போது உள்ள வேக மாற்றம் சமமாக இருக்கும்.
நாம் பொதுவாக வாங்கும் IDE, SATA, SATA2  Harddisk அல்லாமல் ஒரு SSD  வாங்குவது பற்றி யோசியுங்கள்.
நீங்கள் ஒரு புதிய SSD வாங்கி அதில் உங்களின் OS மற்றும் அனைத்து மென்பொருள்களையும் (Photoshop, Coral, AutoCad, 3D Studio Max) போன்ற அதிக செயல் திறன் வேண்டிய அனைத்து மென்பொருளையும் அதிலேயே பதியுங்கள் (Install).
இப்போது உங்களின் கணினியில் இரண்டு Harddisk இருக்கும். SSD இல் OS & Software installations. ஏற்கனவே இருந்த Harddiskஇல் பாடல்கள் மற்றும் படங்கள் போன்ற அதிகம் பயன்படுத்தாத (மென்பொருள்கள் மூலம் எடிட்டிங் வேலைகள் செய்யாமல்.. வெறுமனே கேட்பதர்க்கு / பார்ப்பதற்கு மட்டும் பயன்படும் Media கோப்புகள்)
பொதுவாக நமது கணினி மெதுவாக இருப்பதன் முக்கிய காரணம் அதன் Harddiskஇன் திறன்.
Kingston , Corsair, Intel, Samsung  போன்ற பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குங்கள். விலை சாதாரண Harddiskஐ விட அதிகமாகவே இருக்கும். ஆனால் வாங்கியபின் அதன் வேகம் உண்மையிலேயே பிரமிக்கும் வகையில் இருக்கும்.
இது வேகமானது என்பதற்கு என்ன காரணம்?
பொதுவாக நமது வன் தட்டுகள் (harddisk) உள்ள சில தட்டுகள் (Disks.. similar like our DVDs) இருக்கும்.. அதில் தரவுகளை (Data) எழுதுதல் மற்றும் படித்தல் வேலைகள் (Read & Write operations) நடக்கும். ஆனால் SSD களில் அதன் உள்ளே RAM களில் இருப்பது போல Chipகளே இருக்கும். இதனால் இதில் செய்யப்படும் வேலைகளின் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும்.
Thank You.

Monday, December 4, 2017

ஒரே கிளிக்கில் 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ

கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும். இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணைத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே  பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.



Download Site குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய மென்பொருள்களை தேர்வு செய்து பின் Get Installer பொத்தானை அழுத்தவும் பின் ஒரு பைல் பதிவிறக்கம் ஆகும்.  பின் பதிவிறக்கம் ஆன பைலை நிறுவவும் கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவை. இணைய வேகத்திற்கு ஏற்ப அனைத்து மென்பொருள்களும் நிறுவப்பட்டு விடும்.


பின் அந்த மென்பொருள்களை வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் மென்பொருள்களின் புதிய பதிப்பு வெளிவரும் போது அதனை அப்டேட் செய்து கொள்ளவும் முடியும்.

Sunday, December 3, 2017

Dear Friends Please Give Us More Like Our Page..

Thank You Click on the Below Link

https://www.facebook.com/infotrin/



விண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் விநாடிகளை காட்ட

விண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் மணி மற்றும் நிமிடங்கள் மட்டுமே காட்டும். மேலும் குறிப்பிட்ட தேதியினையும் காட்டும் விநாடி காட்டப்பட மாட்டது. இந்த விநாடியினை காட்ட ஒரு சிறிய மென்பொருள் வழிவகை செய்கிறது.



Download Here


மென்பொருளை தரவிறக்கம் செய்து அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் Clock என்னும் அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். உங்கள் கணினி 64 பிட் என்றால் Clock64 என்ற அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். சிறிது நேரத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் விநாடியானது ஓடத் துவங்கி விடும்.  இந்த மென்பொருள் விண்டோஸ் 7 / 8.1 / 10 ஆகிய இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும்.

Friday, December 1, 2017

யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட


தற்போது தரவுகளை கணினிகளுக்கிடையே பறிமாற்றம் செய்து கொள்ள பெரும்பான்மையான கணினி பயன்பட்டாளர்களால் பயன்படுத்தபடுவது யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் ப்ளாஷ் ட்ரைவுகள் ஆகும். நாம் பயன்படுத்தும் கணினி மற்றும் செல்போன் ஆகிய சாதனங்களுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்போம், கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க காரணம் அதில் இரகசியமான தகவல்கள் மற்றும் கோப்புகளை வைத்திருப்பதனால் மட்டுமே, அதே போல் தான் யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவிலும் இரகசியமான கோப்புகளை வைத்திருப்போம் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க வேண்டும்.

யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டுவது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதற்கென பல மென்பொருள்கள் இணையத்தில் இருந்தும் பெயர் சொல்லும் அளவிற்கு சிறப்பான மென்பொருள் என்று ஏதும் இல்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. கடவுச்சொல் கொண்டு பூட்ட BitLocker வழிவகை செய்கிறது.

முதலில் எந்த யுஎஸ்பி அல்லது ப்ளாஷ் ட்ரைவிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதனை கணினியுடன் இணைக்கவும், பின் கன்ட்ரோல் பேனலை ஒப்பன் செய்யவும், அதற்கு விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் ரன் விண்டோவில் Control என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.


பின் கன்ட்ரோல் பேனல் ஒப்பன் ஆகும், அதில் BitLocker Drive Encryption என்னும் ஐகானை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நீங்கள் எந்த யுஎஸ்பி அல்லது ப்ளாஷ் ட்ரைவிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதன் ட்ரைவ் எது என குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின் Turn on BitLocker என்னும் சுட்டியை கிளிக் செய்யவும்.


அடுத்து உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் சோதிக்க பட்டு, பின் BitLocker என்கிரிப்ஷன் செய்வதற்கான வேலை ஆரம்பம் ஆகும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் மீண்டும் மறுஉள்ளீடு செய்து Next பொத்தானை அழுத்தவும்.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Save to a file என்னும் பட்டியை கிளிக் செய்யவும். பின் ஒரு டெக்ஸ்ட் கோப்பு ஒன்று கணினியில் சேமிக்கபடும். அதில் ஒரு கீ இருக்கும். அதை கொண்டு பிட்லாக்கர் என்கிரிப்ஷன் கடவுச்சொல் மறக்கும் போது மீட்டெடுக்க உதவியாக இருக்கும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Encrypt used disk space only  என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும்.


பின் அடுத்து தோன்றும் விண்டோவில் Start Encrypting என்னும் என்னும் பொத்தானை அழுத்தி, ப்ளாஷ் ட்ரைவினை என்கிரிப்ட் செய்யவும்.


சிறிது நேரத்தில் ப்ளாஷ் ட்ரைவ் முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.


பின் நீங்கள் ப்ளாஷ் ட்ரைவினை பாதுகாப்பான முறையில் கணினியில் இருந்து நீக்கி கொள்ளவும்.பின் நீங்கள் இந்த ப்ளாஷ் ட்ரைவினை கணினியில் இணைக்கும் போது கடவுச்சொல் உள்ளிட்ட பின்புதான் ஒப்பன் ஆகும்.



பின் ப்ளாஷ் ட்ரைவினை முழுவதுமாக ஒப்பன் செய்ய, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, எந்த ட்ரைவினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை இரட்டை கிளிக் செய்யவும். இல்லையெனில் அந்த ட்ரைவ் மீது வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Unlock Drive என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.


பின் கடவுச்சொல்லை தோன்றும் விண்டோவில் உள்ளிட்டு, பின் Unlock என்னும் பொத்தானை அழுத்தவும். அப்போது மூடப்பட்டிருந்த ப்ளாஷ் ட்ரைவ் ஒப்பன் செய்யப்படும்.


பின் நீங்கள் இந்த ப்ளாஷ் ட்ரைவினை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். கோப்புகளை பறிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

ப்ளாஷ் ட்ரைவ் கடவுச்சொல் மறந்துவிட்டால்

யுஎஸ்பி ட்ரைவிற்கு நாம் உருவாக்கிய கடவுச்சொல்லை மறந்து விட்டாலும் அதனை ஒப்பன் செய்யவும் வழி உள்ளது. ப்ளாஷ் ட்ரைவ் உருவாக்கும் போது ஒரு இடத்தில் டெக்ஸ்ட் கோப்பு ஒன்றினை ஒரு இடத்தில் சேமித்து வைத்திருப்போம் அதனை ஒப்பன் செய்தால் அதில் இரகசிய கோடு இருக்கும் அதனை கொண்டு எளிதாக ஒப்பன் செய்துவிட முடியும். இருப்பியல்பாக My Document ல் டெக்ஸ்ட் கோப்பு சேமிக்கப்பட்டிருக்கும்.


ப்ளாஷ் ட்ரைவினை ஒப்பன் செய்யும் போது, கடவுச்சொல் கேட்கும் அப்போது அதற்கு கீழே More Option என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யும் போது Enter recovery Key என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


அப்போது 48 இலக்க இரகசிய கீ கேட்கும் அதை உள்ளிட்டு Unlock பொத்தானை அழுத்தவும். இப்போது பூட்டு திறக்கப்படும். வழக்கம் போல் ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கடவுச்சொல்லை நீக்க
ப்ளாஷ் ட்ரைவிற்கு பிட்லாக்கர் மூலம் உருவாக்கிய கடவுச்சொல்லை முழுவதுமாக நீக்கம் செய்ய முதலில் எந்த ட்ரைவிற்கான கடவுச்சொல்லை நீக்க நினைக்கிறீர்களோ அந்த ப்ளாஷ் ட்ரைவினை கணினியுடன் இணைக்கவும். பின் முன்பு கூறியது போல் கன்ட்ரேல் பேனல் சென்று பின் BitLocker Drive Encryption என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் நீங்கள் நீக்க நினைக்கும் ப்ளாஷ் ட்ரைவிற்கு எதிரே Turn off BitLocker என்னும் பொதியை கிளிக் செய்யவும்.


சிறிது நேரத்தில் முழுவதுமாக டிகிரிப்ஷன் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும். அதாவது கடவுச்சொல் நீக்கப்பட்டு விட்டது என்பதாகும். இந்த முறையை பயன்படுத்தி எளிதாக யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவுகளுக்கு கடவுச்சொல்லை உருவாக்க முடியும்.


பிடிஎப் கோப்புகளை எடிட் செய்ய


பிடிஎப் கோப்புகளை உருவாக்குவதற்கு முக்கியமான காரணம் அதனை எந்தவிதமான எடிட்டிங்கும் செய்ய கூடாது என்பதற்காகவும், மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மட்டுமே ஆகும். நாம் ஆப்பிஸ் தொகுப்பினை கொண்டு டாக்குமெண்ட்களை உருவாக்கும் போது அதற்கு கடவுச்சொல் கொண்டு உருவாக்கியிருப்போம். ஆனால் பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் போது அதற்கு கடவுச்சொல் கொண்டு உருவாக்குவது அவ்வளவு எளிதான செயல் இல்லை. ஏதாவது ஒரு மென்பொருள் துணைகொண்டு மட்டுமே பிடிஎப் கோப்பிற்கு கடவுச்சொல்லை உருவாக்க முடியும். மேலும் பிடிஎப் கோப்பின் பக்கங்களை தனித்தனியாக பிரிக்கவும், பிடிஎப் டாக்குமெண்டிற்கு பேக்ரவுண்ட் வாட்டர்மார்க் செட் செய்யவும் நாம் மூன்றாம் தர மென்பொருளின் உதவியை நாட வேண்டும். 




மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் விருப்பபடி தேர்வினை தெரிவு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட பிடிஎப் கோப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின் Save As பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பினை சேமித்துக்கொள்ளவும்.


இந்த மென்பொருள் உதவியுடன், பிடிஎப் கோப்புகளை பிரிக்கவும், வாட்டர்மார்கினை இடவும், தனித்தனியாக பிடிஎப் பக்கங்களை பிரிக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.

Thank You